காலம்

கலை இலக்கிய காலாண்டிதழ்

பூரண சுதந்திரம் வேண்டி – கனகசபாபதி March 26, 2010

நடந்தது, 1920தைத் தொடர்ந்து வந்த ஒரு சில வருடங்கள். அது சரித்திரம். அறிந்தவர்கள் ஞாபகத்தில் கொண்டு வரவேண்டியது அவசியம்

 1. சந்திப்பு: ஒருவர் பொ. நாகலிங்கம், யாழ்பரமேஸ்வராக்கல்லூரி மாணவர். பரமேஸ்வராக் கல்லூரி எங்கே எனக் கேட்காதீர்கள் யாழ் பல்கலைக் கழகம் ஏப்பம் விட்டு விட்டது. நாகலிங்கம் இளவயது முதலே இடதுசாரிக் கொள்கையில் மாய்ந்தவர். பின்னாளில் இலங்கா சமசமாஜக் கட்சி சார்பாக சில தடவைகள் தேர்தலில் போட்டியிட்டு தோல்விகண்டு களைத்துப் போய் ஒதுங்கிக் கொண்டவர். தமிழர்களில் ஒருவரை மூதவை உறுப்பினராக்கினாலாவது அவர்கள் எம்மேல் நம்பிக்கை வைத்தாலும் வைக்கலாம் என  N.ஆ பெரேரா எண்ணி மூதவை உறுப்பினராக்கியும் தமிழர் பார்வை தன்பக்கம் திரும்பாதது கண்டு ஏமாந்ததற்கான காரணர். கிடைத்தது  செனேற்றர் என்ற பெயருக்கு  முன்னான பட்டம். அது நாகலிங்கத்துடன் ஒட்டிக்கொண்டது. மற்றவர் ஒறேற்றர் சுப்பிரமணியம். அங்கேயும் பட்டம் ஒன்று ஒட்டிக் கொண்டதைக் காணமுடியும். ஆந்திரப் பிரதேசத்தில் கல்வி இலாகாவில் தொழில் பார்த்த தனதுபெரியப்பாவுடன் இருந்து ஆரம்பக் கல்விகற்ற சுப்பிரமணியம் தாய்நாடு திரும்புகையில் காந்திக் குல்லாய் சகிதமாக  கொஞ்சம் ஆங்கில அறிவுடனும் மிச்சம் காந்தீயத்துடனும் வந்தார். அவர் படிக்கப் போன பாடசாலை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி. அங்கே அதிபராயிருந்தவர் ஒரு கிறிஸ்தவர். பெயர் நெவின்ஸ். செல்லத்துரை. ஒரு நாள் சுப்பிரமணியம் பேசிய ஆங்கிலத்தினைப் பார்த்து மயங்கி இவன்  எடா என்றார் நெவின்ஸ். அன்று தொடக்கம் முதலியாரைக் கரடி விடாத ஹோதாவில் சுப்பிரமணியத்துடன் இறுதி வரை ஒட்டிக் கொண்டது.

 இவர்கள் இருவரும் உற்ற நண்பர்கள் மாலை வேளைகளிலும் வார இறுதி நாட் களிலும் நீண்ட நேரம் சம்பாசிப்பார்கள். அடிபடுவது அரசியல் தான் பிரதானமாக. நாகலிங்கத்திற்கு அகில இலங்கை இந்து வாலிப சங்கம் ஒன்று தொடக்க வேண்டும் என ஆசை தட்டியது. ஆனால் ஒறேற்றருக்கு அது உசிதமாகப் படவில்லை. இழுபறியாய் நின்ற சமயம் .

 2. சங்கமம்: மூன்றமவர்  நண்பர்கள் இருவருக்கும் பட்டதாரிகள் ஆகவேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. ஆகவே சங்கைக்குரிய பிக்னெல் பாதிரியார் தலைமையில் இயங்கிய யாழ்ப்பாணக் கல்லூரியை நோக்கிப்படை எடுத்தனர். கற்பதற்கு அனுமதி கிடைத்தது. அது மட்டுமா? அங்கே ஒருவரைக் கண்டனர். தலைப்பட்டனர் தலைவன் தாள் என. அவர் பெயர்? பேரின்பநாயகம். அங்கேயும் ஹண்டி என்பது ஒட்டிக்கொண்டு இருந்த பெயர். பிறப்பால் ஹண்டி கிறிஸ்தவர். வரித்ததால் சைவர். வாழ்வியலில் காந்தியர். ஒத்த போக்குடைய  மூவரும் ஒட்டிக் கொண்டனர். ஹண்டி அவர்கள் யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்று டீ.யு பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் அங்கேயே ஆசிரியத் தொழிலில் அமர்ந்துள்ளார். அவரது ஆங்கிலப் புலமை, பகுத்தறிவுவாதம், ஏகாதிபத்திய  எதிர்ப்பு,  நகைச்சுவையான பேச்சு என அத்தனையும் இளைஞரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றமையால் அவரைச் ‘ ஒரு இளைஞர் படை எப்பொழுதும் ஆரோகணித்து நிற்கும். சும்மா இருப்பானேன் ஆக்கபூர்வமாக எதனையாவது செய்லாமே என்ற எண்ணத்தின் விளைவு? யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ்சின் சுகப்பிரசவம் 1924இல். இது பெடியன்கள் விசயம் என்பதால், இஆ.ர்.யு என்ற பெரியோரைக் கொண்ட வேறோரு அமைப்பு தீவிரமாக இயங்கி வந்தது. அதன் தூண்களாக சேர் பொன் இராமநாதன், ஏ. முத்துக்குமாரு, ஆ.ளு இளையதம்பி போன்றோர் இருந்தனர் அவர்கள் கீரிமலை மடத்தில் ஒழுங்கு முறையில் சைவசமயம் பற்றிய சர்ச்சைகளில் ஈடுபட்டனர். மாண வர் காங்கிரஸ் எல்லா மதத்தினரையும் அனுசரித்துச் செல்ல விரும்பியது. அதனை நடைமுறையும் படுத்தியது. ஆகவே இரு அமைப்புகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படாமல் விடுவதற்கு நியாயம் இல்லை. வயதுக்குச் சற்று மரியாதை கொடுப்பார்கள் என்ற எண்ணத்தினாலோ தெரியாது மாணவர் காங்கிரஸ் சடுதியாக யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் எனப் பெயரினைச் சத்தியக் கடுதாசி முடிக்காமலேயே மாற்றம் செய்தது. கற்றோர் பலர் அதன் பால்  ஈர்க்கப் பட்டனர். வாலிபம் பலம்  பெற்றது. அதன் குறிக்கோள்களை ஓங்கி முரசறையத் தொடங்கியது. அவை

1.     நாட்டின் அரசியற் சுதந்திரம்

2.     தாய் மொழியில் கல்வி

3.     சாதியப் பாகுபாட்டு எதிர்ப்பு

4.    யாவருக்கும் சமநீதி

யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தனது வழமையான கூட்டங்களை யாழ் நகர மண்டபத்தில் வைத்து சமூக முன்னேற்றம் சம்பந்தமான விசயங்களை ஆரய்ந்தது  இரண்டு அமைப்புகளுக்குமிடையே கொள்கை ரீதியன முரண்பாடு ஏற்படவே செய்தது. இளம் கன்று பயமறியாதல்லவா எதிர்ப்பின் மத்தியிலும் அவர்கள் குரல் ஓங்கி ஒலிக்கவே செய்தது.

 யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தன்னை மும்முனைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டமை அதன் இளம் வயதிற்கு உகந்த போராட்டமாயது. அதனது அரசியற் சுதந்திரத்துக்கான போராட்டம் ஏகாதிபத்திய அரசுக்கு எதிரானதாக அமைந்தது. அதனது சாதிய எதிர்ப்புப் போராட்டம்   சாதிப் பற்றுடைய இந்து வர்ணாசிரம முறையே வாழ்க்கை நெறி என ஓலமிடும் மிலேச்சர்களுக்கு எதிரான போராட்டமானது. அதன் தாய்மொழிக்கல்விக் கோட்பாடு ஏகாதிபத்திய மாயையில் மயங்கி நிற்கும் அந்நிய மோகிகளுக்கு எதிராக அமைந்தது.

 3. சமர்: யுத்தகளம் 1: இந்தியப் படை அன்றும் இலங்கை வந்தது: மகாத்மா காந்தி, ஜெவஹர்லால் நேரு, சத்தியமூர்த்தி, வி கல்யாணசுந்தர முதலியார், கமலாதேதி சட்டோபாத்தியாயா, ஏன் திருமதி செலீனா N.ஆ பெரேரா என அத்தனை இந்தியப் போர்வீரர்களும் இலங்கைக்கு இறக்கப் பட்டனர். போராட்டம் நடந்தது  காந்திஜியை இலங்கைக்கு வரப்பண்ணியதே  பேரின்பநாயகமும், வாலிப காங்கிரசுமே. தனது சுற்றுப்பயணத்தின்போது முதல் முதலாக ’சுதந்திரம்’ என்ற பதத்தினைக் கேட்டதே யாழ்ப்பாணத்தில் தான் என காந்திஜி  கூறும் அளவினுக்கு  யாழ்ப்பாண வாலிப காங்கிரசின் குரல் உரத்து ஒலித்தது. இந்தியப் போர் வீரர்களின் தாக்குதல் ஏகாதிபத்தியத்திற்கு வயிற்றினைக் கலக்கியது. நீதிமன்றம் வரை அவர்களை இழுத்துச் சென்றது. கொழும்பு நோக்கிப் படை நகர்ந்தது: 1931ஆம் ஆண்டு வாலிப காங்கிரசின் சரித்திரத்திலேயே ஒரு திருப்புமுனையாக அமைந்தது. வெள்ளைக் கார அரசு இலங்கை மக்களுக்கு டொனமூர் அரசியல் சாசனம் என்ற பிச்சையை வழங்கிற்று. அந்த ஆண்டினிலே ஒறேற்றர் அவர்கள் தான் வாலிப காங்கிரசின் செய லாளராகப் பணியாற்றினார். வருடாந்த மகாநாடு நடைபெற்றது கமலாதேவி சட்டோபாத்தியாயா சிறப்புப் பிரதிநிதியாக இந்தியாவிலிருந்து வந்திருந்தார். டொனமூர் குழுவின் அறிக்கை இலங்கைக்குப் பூரண சுதந்திரத்தை அளிக்கவில்லை எனவே வாலிப காங்கிரஸ் அதனை நிராகரிக்கிறது என்பது  கூட்டத்தின் ஏகோபித்த முடிவாக இருந்தது. ஆகவே இதனை நிலைநிறுத்தும் வண்ணமாக வரவுள்ள சட்டசபைத் தேர்தலை பகிஸ்கரிப்பது என்பது ஏகமனதான தீர்மானமாக அங்கீகரிக்கப்பட்டது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களிடம் நேரடியாகவே சென்று தேர்தலைப் புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுவது என வாலிபர் காங்கிரஸ் தீர்மானித்தது. வட மாகாணத்தில் அப்போது ஐந்து தேர்தல் தொகுதிகள் இருந்தன. அதில் மன்னார்-வவுனியா ஒரு தொகுதி. ஏனைய நான்கு தொகுதிகளிலும் போட்டியிட முன்வந்த வேட்பாளர்கள் வாலிபகாங்கிரஸ் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து தமது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். அப்போது இங்கிலாந்தில் சட்டம்  பயின்றபின்னர் இலங்கை வந்து தனது சட்டத் தொழிலில் நிறையவே சம்பாரித்த திரு. ஜி.ஜி. பொன்னமபலம் அவர்கள் வவுனியாவில் குடியிருந்தார். அவர் அத்தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வாலிப காங்கிரஸ் தொண்டர்கள் அவரிடம் சென்று தேர்தலைப் புறக்கணிக்குமர்று இறைஞ்சினர். மன்னாரில்  வசிக்கும் திரு ஆனந்தன் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவர் புறக்கணித்தால் தானும் செய்வதாகத் திரு பொன்னம்பலம் கூறினார். தொண்டர்கள் ஆனந்தனிடம் சென்று புறக்கணிக்குமர்று கேட்டபோது அவர் அந்த வேண்டுகோளுக்குச் செவி சாய்க்க மறுத்துவிட்டார். எனவே திரு. பொன்னம்பலமும் விலக மறுத்துவிட்டார். இதற்காக வாலிபர் காங்கிரஸ் பொன்னம் பலத்தினை வெறுத்து ஒதுக்கவில்லை. மாறாக அதன் தொண்டர்கள் அத்தேர்தலில் பொன்னம்பலத்தினை வெற்றி பெற வைப்பதற்காகக் கடுமையாக உழைத்தனர். ஆனாலும் பொன்னம்பலம் தோல்வியடைந்தார்.

 வவுனியாவைத் தவிர வடபகுதியில் தேர்தல் நடைபெறவேயில்லை. வாலிபகாங்கிரசின் பகிஸ்கார முயற்சிக்கு அமோக வெற்றி. இலங்கை வரலாற்றிலே முதல் முதலாக நடந்த தேர்தல் பகிஸ்கரிப்பின் வெற்றி தென்னிலங்கையையும் ஆர்ப்பரிக்கச் செய்தது யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் இலங்கை வாலிபர் காங்கிரசாவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. பின்நாளில் ஆ.நு.க என்ற அமைப்பின் நிறுவனரும் கொடூர வகுப்புவாதியுமான பிலிப் குணவர்த்தனா அப்போது இலண்டனில் இருந்தார். அவர் பத்திரிகைகளுக்கு ஒரு கடிதம் வரைந்தீருந்தார். அதன் சாரம். ‘கடந்த சில வருடங்களாக இலங்கையிலே அரசியல்  சாதுரியத்தினைக் காண்பிக்கின்ற ஒரேயொரு அமைப்பு யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசே. பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தில் இருந்து உடனடியாகவும் முழுமையானதுமான சுதந்திரத்திற்காகப் போராடும் வண்ணம் அவர்கள் தமது தலைவர்களை நிர்ப் பந்தித்துள்ளனர். எமது சிங்கள நண்பர்கள் இதனை விளங்கி அவர்களைப் பின் பற்றுவார்களா? ஒரு மிகப் பெரிய போராட்டம் எம்மை எதிர்நோக்கி உள்ளது. அதன் தொடக்கமே தான் இந்த தேர்தல் புறக்கணிப்பாகும்.’

 1931 மே மாதம் அகில இலங்கை வாலிப காங்கிரஸ் வெள்ளவத்தையிலே அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. யாழ்ப் பாணத்திலிருந்தும் பெரும் தொகையான பிரிதிநிதிகள் சென்றிருந்தனர். அதன் செயலாளராக வலன்ரைன் பெரேரா அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். பண்டிதர் ஜெவஹர்லால் நேருவும் சமுகமளித்திருந்தார் அட்டகாசமாக ஆரம்பமானது. அத்துடன் அதன் கதையும் முடிந்தது. ஏன் இலாப நட்டக் கணக்குப் பார்த்தார்கள்: இரண்டு வருடங்கள் ஓடின. புதவிக்காக பச்சோந்தியாகும் கூட்டமொன்று  பகிஷ்கரிப்பின் இலாப நட்டக் கணக்குப் பார்க்கத் தொடங்கியது பகிஷ்கரிப்பால் தமிழ் மக்கள் பெரும் இழப்பினுக்கு ஆளாகியுள்ளனர் என உக்கிரமமாகப் பிரச்சாரம் நடந்தது. இதனை முன்னின்று நடத்தியவர்கள் யாராயிருக்கலாம் என நான் சொல்லத் தேவையில்லை. ஆம். திரு.ஜி.ஜி பொன்னம் பலமே தான். பகிஸ்கரிப்பு நடந்த பகுதிகளிலே பகிஸ்கரிப்பினை வாபஸ் பெற்று மீண்டும்  தேர்தல் வைக்க வேண்டும் என்;ற கோரிக்கையும் அவர்கள் சார்பாக பிரேரிக்கப் பட்டது.

வாலிபர் காங்கிரஸ் அதனை எதிர்த்தே நின்றது. அரசு இவர்கள் பக்கம் நிற்குமா? 1934ல் தேர்தல் மீண்டும் நடந்தது பொன்னம்பலம் சட்டசபைக்குள் புகுந்தார். இம்முறை பருத்தித்துறையின் பிரதிநிதியாக. மகுடம் ட்டினார் தமிழர் தலைவராக. தமிழ் காங்கிரஸ் உதயம் வடக்கே. அதே சமயம் இலங்கை வாலிப காங்கிரசின் அடிப்படைப் கொள்கைகளுடன் இலங்கை சமசமாஜக் கட்சி தெற்கே 1935ல் உதயமானது. வாலிப காங்கிரசிலிருந்து சிலர் அங்கே பாய்ந்தனர். சிலர் இங்கே பாய்ந்தனர்.. வேறுசிலர் போதுமடா சாமி என ஒதுங்கிக் கொண்டனர். பின் ஒரு சந்தர்ப்பத்திலே ஹண்டி அவர்களும், ஒறேற்றர் அவ்களும் பங்குபற்றிய கூட்டமொன்றிலே ளு.று.சு.னு பண்டாரநாயக்கா வாலிபகாங்கிரன்  இனத்துவேச நோக்கமே சட்டசபைத் தேர்தலைப் புறக்கணிப்பதற்குக் காரணமானது என நாக் கூசாமல் கூறிய பொழுது ஹண்டி அவர்கள் அதனைத் தீவிரமாக எதிர்க்க வேண்டி வந்துவிட்டது.

 வழக்கு மன்றம் ஏறிற்று வாலிபர் காங் கிரஸ் 1942ஆம் ஆண்டுதான் வாலிபர் காங்கிரஸ் நடத்திய கடைசி மகாநாடு என எண்ணுகிறேன். இது தொல்புரம் வடக்கம்பரை அம்மன்கோயில் வீதியில் நடைபெற்றது. இரண்டாம் உலகப் போர் உக்கிரமமாக நடைபெற்றுக் கொண்டிருந்தகாலம். காலாநிதி N.ஆ பெரேராவின் மனைவியார் செலீனா பெரேரா இந்தியாவில் வசித்துக் கொண்டிருந்தார். அவர் சிறப்புப் பேச்சாளராக மகாநாட்டினில் பங்கு பற்றினார். தனது உரையினிலே, ‘வெள்ளைக்காரரை இலங்கையை விட்டே விரட்டியடிக்க வேண்டும்; என வெகு உக்கிரமாகப் பேசினார். அதன் விளைவு இராஜத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் மேல் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. பின்னர் ஒருபடியாக அந்த வழக்குத் தள்ளப்பட்டது.

யுத்தகளம் 2. முதல் கட்டப் போர் யாழ்ப் பாணக் கல்லூரியில் சிறுபான்மை இனத்தினைச் சேர்ந்த ( அப்போதைய பெயர்: தாழ்த்தப்பட்ட இனம்) ஒரு மாணவனைக் கல்வி கற்பதற்காக பிக்னெல் பாதிரியார் சேர்த்துக் கொண்டார். வகுப்பில் இருந்த அத்தனை உயர்சாதி மாணவருக்கும் வந்த தேகோபம். வேளி நடப்புச் செய்தனர். போனால் போங்கள் நான் தனி ஒருவனுக்குத் தனி ஒருவனாகக் கல்வி புகட்டுவேன் என்றார் பிக்னெல் பாதிரியார். இல்லை கவலையுறாதீர்கள் நானும் உங்களுடன் நிற்கிறேன் என்றார் ஹண்டி. அங்கே கண்ட வெற்றி மேலும் பல கல்லூரிகளைச் சிறுபான்மை மக்களுக்காகத் திறந்து விட வைத்தது என்றாலும் முழுமையான வெற்றி பெற மேலும் அரை நூற்றாண்டு எடுத்தது.

 அடுத்தகட்டம்: வாலிபகாங்கிரஸ் வருடாவருடம் பெரிய விழா எடுத்தது. ஆரம்பத்தில் கீரிமலை மடம் அதற்கான இடவசதி செய்து கொடுத்தது. ஆனால் காங்கிரசின் நடவடிக்கைகள் மட நிர்வாகத்திற்கு அத்தனை ஜீரணிக்கக்கூடியதாக அமையவில்லை. காரணம்? சாதி ஒழிப்பு என அது குரலெடுப்பதும் சமபந்தி போசனம் என அது செயல்படுத்துவதும் நிர்வாகத்தின் காதுக்கும் கண்ணுக்கும் நல்ல சகுனங்களாக அமையத் தவறின. அதேசமயம், இந்து சமயத்தையும், வர்ணமாசிரமத்தையும் காப்பதற்கெனக் கங்கணம் கட்டியபடி ஒரு ‘வேதாகம சைவ சித்தாந்த சங்கம்’ ஒன்று தோன்றியது. அதன் தலைவர் வேறு யாருமில்லை. சேர் பொன் இராமநாதன் அவர்களே. ஆகவே வேதாகம சங்கத்தினரின் வற்புறுத்தலுக்கு மடம் மண்டியிடுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. வருடாந்தக் கூட்டங்கள். நடத்த வாலிபர் காங்கிரஸ் வேறு இடங்கள் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வசதியான இடம் கிடைக்கவில்லை. கிடைத்த இடங்களில் வசதியை ஏற்படுத்தியது. விசாலமான ஓலைக்கொட்டகைகள் போட்டு விழாக்களை எடுத்தது. அது கூடப் பொறுக்கவில்லை சங்கத்தின் அன்பர்களுக்கு. அன லுக்கு இரையாக்கினர் கொட்டில்களை. வேறு இடங்களில் மாற்று வசதி செய்தனர் சமபந்திபோசனமா  எங்கே. பார்க்கலாம் உட்கார விட்டால் தானே சமபந்தி என் கல்லெறிந்து கூட்டத்தைக் கலைத்தனர். போகட்டும், சமனாக நின்றாவது உண்போமே என்று  தண்ணீர் குடிப்பதற்காகக் கிணற்றடிக்குப் போனால் அங்கே  அரவங்கள் மிதந்தன, அடித்துப் போட்டவர்கள் புண்ணியத்தால் பாவம் பாம்புகள். சமபந்திக்காக உயிர்த்தியாகம் செய்தவற்றின் பட்டியலில் அவைகளையும் சேர்க்க வேண்டியதாயிற்று. இதை எல்லாம் யார் செய்தார்கள்? ‘பாவம் செய்யாதே மனமே நாளை கோபம் கொண்டே யமன் கொண்டோடிப் போவான்’ என நீதி போதிக்கும் வேதாகம சைவ சித்தாந்த சபையினர். மேலும் ஒரு முயற்சி: ஹண்டியின் அழைப் பின் பேரில் மகாத்மா காந்திஜி வந்தார். அவர் பேசுவதாக பருத்தித்துறையின் அல்வாயில் ஒரு கூட்டம். மண்டபம் ஒன்றில் நடந்தது. ஆனால் மண்டபத்தினுள் சிறுபான்மை இனத்தவர் வருவதற்குத் தடை விதித்தனர். இதை அறிந்த காந்திஜி தான் கூட்டத்திற்கே வரப் போவதில்லை என முரண்டு பிடித்தார். வேறுவழியில்லாமல் அச்சமூகத்தவரை மண்டபத்தில் விடச் சம்மதித்தனர். ஆனால் அங்கேயும் இட ஒதுக்கீடு நடந்தது. அவர்கள் விறாந்தையில் மாத்திரம் உட்காரலாம் என்ற நிபந்தனை.

 யுத்தகளம் 3: சுவாமி விபுலானந்தர் யாழ்ப்பாணத்தில் விஞ்ஞான ஆசிரியராகவும்  பின்னர் மானிப்பாய் இந்துக்ககல்லூரியின் அதிபராகவும் கடமையாற்றியவர். பாரதியின் தேசபக்திப் பாடல்களையும்  புதுமைக் கவிதைகளையும் யாழ்ப்பாணத்தில்  பெரும்அளவில்  பரப்பிய பெருமை சுவாமி விபுலானந்தரையும் வாலிப காங்கிரசினையுமே சாரும். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் பாடசாலைப் பிள்ளைகளுக்கு தாய்மொழி  மூலமாகவே கல்வி புகட்ட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தது. வாலிப காங்கிரஸின் தூண்களாக இரந்தவர்கள் முக்கியமாகக் கல்வியாளர்கள், மற்றும் ஆசிரியர்களே. ஆகவே இக்கொள்கையினை அகில இலங்கை ஆசிரியர் சம்மேளக் கூட்டங்களில் அவர்கள் வற்புறுத்தத் தவறியதில்லை.மாறாக, தென்னகத்தில் உள்ள கல்வியாளர் களில் பெரும்பாலோர் இதற்கு நேர்மாறன கருத்துடையவர்களாகவே இருந்தனர். இதன் விளைவாக யுஇஊ.ரு.வு என அழைக்கப் படும் ஆசிரியர் சம்மேளத்தின் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட ஹண்டி அவர் கள் தோல்வியைத் தழுவவேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டது. தனிச்சிங்களச் சட்டம் வந்ததிற்குக்கூட  ஹண்டியும் அவரது இளைஞர் காங்கிரசும் தான் காரணமாக அமைந்தது எனச் சிங்களப் பேராசிரியர் ஒருவரும் பாராளுமன்ன உறுப்பினர் ஒருவரும் திரு யுஇநு தம்பர் அவர்களுக்கு ஒரு சமயம்  கூறினாராம். அது வேடிக்கையாகக் கூறப் பட்டதோ அல்லது வினயமாகக் கூறப்பட்டதோ தெரியவில்லை. அவரது கருத்துப்படி தாய்மொழிக் கல்வி என்ற இளைஞர் காங்கிரஸ் ஒலித்தமையே சிங்களப் பேரினவாதிகளுக்குத் தனிச் சிங்களம் என்ற எண்ணத்தினைக் கொடுத்திருக்கலாம்.

 சம்பவாமி யுகே யுகே: 1942 நாடு, மக்கள், மொழி என்ற உணர்வு போனது ‘நான், நான், நான்’ என்ற கூச்சல் எழுந்தது. வாலிப காங்கிரஸ் மாய்ந்தது. ஒரு தேசம் ஒரு சாதி என்ற உணர்வு  மறைந்தது. வேறெரு காங்கிரஸ் பிறந்தது. தேசியம் பேசிய தென்புலத்தார் இனவாதம் பேசினர் வடபுலத்தார் பிரிவினைவாதம் பேசினர் எல்லாமே போனது. இன்றுவரை மீளவில்லை.